எந்திரனுக்கு தனி விமானம்
July 29th, 2010 | Tags: எந்திரன்
எந்திரன் ஆடியோ கோலாலம்பூரில் வரும் 31ஆம் தேதி வெளியிடப்படுகிறது. படத்தின் போஸ்டர் டிசைன் கூட வித்தியாசமாக அனைவரையும் கவரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர்.
இதற்காக டிசைனர் சித்தார்த்தின் மித்ரா மீடியா அலுவலகத்துக்கு நேரில் வந்த ஷங்கர் அதிக நேரம் அவருடன் போஸ்டர் டிசைன் குறித்து டிஸ்கஸ் செய்தார் (போஸ்டருக்கே இப்படியா?).
மலேசியாவில் நடக்கும் விழாவுக்கு தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் சிறப்பு விருந்தினர்கள் செல்கிறார்கள். இதனால் அனைவருக்கும் சேர்த்து தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனராம்.
உண்மையிலேயே பிரமாண்ட படம்தான்.


தலைவர் படம்னா சும்மாவா ….!
by
ஷரன் சேகர் ..,
பாண்டிச்சேரி-9
Eastorbest rajnikanth.is.best