நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்கு தயாராகிறார் தமன்னா
ஆளில்லா ஓட்டப் பந்தயத்தில் நடந்தாலே பரிசு நிச்சயம். அப்படித் தான் இருந்தது தமன்னாவின் திரை வாழ்க்கையும். போட்டிக்கு யாரும் இல்லாத நிலையில், தத்தித்தத்தி நடந்துவந்த இவருக்கே முதலிடம் கிடைக்க இருந்தது. வெற்றிடம் தந்த மமதையில், “இன்னாருடன்தான் நடிப்பேன்;
இப்படித்தான் நடிப்பேன். இந்த நேரத்தில்தான் நடிப்பேன், கோடிக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்’ என நிபந்தனைகளை விதிக்கத் துவங்கினார்.
இந்நிலையில் சத்தமில்லாமல் வந்த ஹன்சிகா மோத்வானி, தமன்னாவின் கனவில் கரிபூசி வருகிறார். தனுஷுடன் “மாப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் “இச்’, விஜய்யுடன் “வேலாயுதம்’ படத்தில் நடிக்கும் இவரது கால்ஷீட் டைரி, விவசாயியின் கடன்சுமையைப் போல் விறுவிறுவென ஏறிவருகிறது.
தயாரிப்பாளர்களை கசக்காமல் கால்ஷீட் நிரப்பும் இவரிடம் போட்டி போட முடியாத தமன்னா, நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரும் நிலைக்கு ஆளாகிவிட்டார்.

