ஷங்கரின் 3 இடியட்ஸ்
தமிழ் மற்றும் தெலுங்கில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கை இயக்கவுள்ளார் ஷங்கர்.
இந்தியில் ஆமிர்கான், மாதவன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 3 இடியட்ஸ். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இரு மொழிகளிலும் ஷங்கர் இயக்கவுள்ளார். தமிழ் 3 இடியட்ஸின் மூன்று நாயகர்களில் ஒருவராக விஜய் நடிக்கலாம் எனத் தெரிகிறது. மற்ற இருவர் குறித்து தேர்வு நடந்து வருவதாக தெரிகிறது.
தெலுங்கில் யார் நடிப்பார்கள் என்பது தெரியவில்லை.ஜெமினி பிலிம் சர்க்யூட் இப்படத்தை தயாரிக்கிறது. ஷங்கர் இதுவரை எந்தப் படத்தையும் ரீமேக் செய்து இயக்கியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எந்திரன் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஷங்கர் பிசியாக இருப்பதால் இதை முடித்து விட்டு 3 இடியட்ஸுக்கு வருவார் எனத் தெரிகிறது.

